Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு.. திடீரென திரும்ப பெற்ற கெஜ்ரிவால்..!

Mahendran
வெள்ளி, 22 மார்ச் 2024 (13:25 IST)
தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நிலையில் தனது கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் இல்லாமல் தானே அவருக்காக வாதாட போவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அவர் தனது கைதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றுள்ளார். அமலாக்கத்துறை சார்ந்த வழக்குகளை வழக்கமாக விசாரிக்கும் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் எம் சுந்தரேஷ் மற்றும் பேலாதி வேதி அமர்வுதான் இந்த வழக்கையும் விசாரிக்க இருந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனுவை வாபஸ் பெற்றதாக தெரிகிறது

இந்த அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட கவிதா கைதுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை ஏற்க முடியாது என மறுத்து உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வலியுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் தன்னுடைய மனுவும் விசாரணைக்கு ஏற்க மறுக்க வாய்ப்பு இருப்பதாக நினைத்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது  மனுவை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை..!

தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.. அர்ஜூன் சம்பத் பேச்சு

வானத்திற்கும் பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின் ஆட்சியில் காவல் நிலைய மரணங்கள்: என்ன பதில்? ஈபிஎஸ்

தமிழக சட்டசபை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

ராமதாசுக்கு வேறு வேலை இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments