Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (16:37 IST)
தமிழகத்தில் ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை கூறிய நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது 
 
நாகை, திருவாரூர், வேலூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மின்னல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை குறித்த விபரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சென்னையில் இன்று மேகம் மழைமூட்டமாக இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments