தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.