சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வாசல்களையும் திடீரென மூட உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் சென்னை பூக்கடை அருகே ஐகோர்ட் கட்டப்பட்ட நிலையில் இந்த பகுதியில் வசித்த மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருப்பதால் உயர்நீதிமன்ற வளாகத்தின் பாதையை பயன்படுத்த தொடங்கினர். நீதிமன்றமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில் வருங்காலத்தில் நீதிமன்ற வளாக பாதைகளை உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் சனி ஞாயிறு இரண்டு நாள் மூடப்படுவது வழக்கம் என்ற நிலையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நேரத்தில் பொதுமக்கள் வழக்கறிஞர் என யாரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் வழி பாதைகளை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது