Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மழைக்காலத்தில் வெள்ளக் காடாகும் சென்னை : தீர்வு எப்போது ?

மழைக்காலத்தில் வெள்ளக் காடாகும் சென்னை :  தீர்வு எப்போது ?
, புதன், 30 அக்டோபர் 2019 (18:22 IST)
சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பெரும் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் ஒரு இடம் விடாமல் அத்தனை இடங்களிலும் அடைமழையாய்க் கொட்டித் தீர்த்தது மழை. அதில் வீடு வாசல் இழந்தவர்கள் ஏராளம். அதை மீண்டும் நினைவு கூறுவதற்காக இங்கு எழுதவில்லை. ஆனால் அதேபோல் ஒரு அவல நிலை,மழைக்காலங்களில்  மக்கள் பாதுகாப்புக்குக் கூட ஒதுங்க முடியாத நிலை இனிமேல் ஏற்படக்கூடாது என்பதற்காக இங்கே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.
மக்கள் அடர்த்தியான சென்னை வீதிகளில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்போருக்கு எந்த கஷ்டமும் இல்லைதான்,ஆனால் அன்றாடங் காய்ச்சிகளாக தினமும் சம்பாதித்த கூலிப் பணத்தில் வாய் - வயிற்றைக் கழுவி நிம்மதியாய் உறங்க  ரோட்டோரத்திலும் , சிலர் குறைந்த வாடகைக்கு ஒரு தரைத்தளத்தில் நான்கு ஐந்து வீடுகளுக்கும் சேர்த்து ஒரு அட்டாச்சிடு டாய்லெட் - பாத்ரூம் கொண்ட வாடகை வீடுகளில் வசிப்பதைப்பார்க்க முடிகிறது.
webdunia
சென்னைக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களின் பெரும்பாலானர்களின் வாழ்விடம் இப்படியாகத்தான் உள்ளது. வெயில் காலத்தில் சூரியத் தனல் ஆஸ்பெட்டாஸ் சீட் மற்றும் ஓட்டில் இறங்குகிறது. தென்மேற்கு - வடகிழக்குப் பருவமழைகாலத்தில் மழைத்துளி சாரைசாரையாக  மேற் கூரை விரிசல் வழியாக வீட்டுக்குள் திருடனைப் போல் எட்டிக் குதிக்கிறது.
webdunia
வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து நிம்மதியாகத் தூங்கலாம் என்றால் இப்படி மழையிலும் வெய்யிலிலும் மக்களின் வேதனைகள் கழுத்தில் சுருக்குப் போட்ட மாதிரி ஏழைக்குடியானவர்களை வருத்துகிறது.
 
இது ஒருபக்கம் இருக்க, இந்த மழைக்காலத்தில் சாலையிலும் சரி, வீடுகள் உள்ள தெருக்களிலும் சரி பெய்கிற மழைத்துளி பூமிக்குள் செல்லாமல் எங்கெங்கு காணினும் அணையைத் திறந்துவிட்ட மாதிரி  ஒரே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. 
webdunia
ஒவ்வொரு முறையில் அரை மணிமணிநேரம் வானம் தூறல் போட்டதுக்கே இந்த சென்னையில்,மக்கள் பாதிக் காலுக்கு பேண்ட்டை சுருட்டிவிட்டு முழங்கால் வரை தேங்கியுள்ள நீரில்தான் நடக்க வேண்டியதாக இருக்கிறது. 
 
அதிலும் , பலதெருக்களில் சிமெண்ட் தரைதளம் உள்ளதால் மழை நீர் பூமிக்குள் செல்லவே வழியில்லை. அந்த நீர் ஓடிச் செல்ல மக்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் தோண்டி வைக்கவில்லை. நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ஒரு கால்வாய் கூட  காணமுடியவில்லை என்பதுதான் சோகமாக உள்ளது.
webdunia
இந்த மழைக்காலம் வந்தால் மட்டுமே டெங்கு குறித்து விழிப்புணர்வு இதர தொற்றுகள் குறித்த விழிப்புணர்வு சீட்டுக்களை எழுதி தொலைக்காட்சிகள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்களில் படிக்கிற அதிகாரிகள் அமைச்சர்கள் இந்த மழைக்காலத்திற்கு  முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நோய்களின் தாக்கமும் ,அந்தக் நோய்களுக்கு மக்கள் பலியாவதும் குறையுமல்லவா ?
webdunia
மழை என்று வந்தாலே சாக்கடைக் கழிவுகளுடன் , பலர் துப்பிய எச்சில் , சிறுநீர், மலங்கள் , அழுகிய காய்கறிகள், தெருக்குப்பைத்தொட்டிகள் இதெல்லாவற்றையும் குவித்துப்போகும் . அப்படி முழங்கால் வரை உள்ள மழைநீரில் தானே தினமும் செல்ல வேண்டியதுள்ளது. அதனால் மனிதர்களுக்கு தொற்று அபாயம் ஏற்படாதா ?
 
வருமுன் காப்பது போல்  அதற்கான தீர்வை அரசுத் துறை அதிகாரிகள் தான் எடுக்க வேண்டும், பிளாட்டில் வசிப்பவர்களுக்கு இதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.அவர்கள் காரில் ஏறி, கார் பார்க்கிங்கில் இறங்கி லிப்ட் ஏறி அங்கிருந்து வீட்டுக்குச் சொகுசாக செல்வார்கள்.

ஆனால் தெருவாசிகளும் ,சாதாரணமானர்களும், மத்தியவர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அப்படி இல்லை. மேற்சொன்ன இத்தனை சங்கட துக்கங்களைக் கடந்துதான் செல்ல வேண்டும்.  தெருவில் இரு புறமும் வரிசையாக வீடுகள், சிமெண்ட் சாலைகள், கால்வாய் எதுவும் இல்லை, நீர் செல்ல குழாய்களில் மாற்று வழி இல்லை, இப்படி இருந்தால் ஐந்து நிமிட மழைக்கே மக்கள் வெள்ளம் வந்ததாகத்தான் நினைத்து அலறுவார்கள்.அதுதான் உண்மையும் கூட. 
 
இப்படி சாலையிலும், தெருக்களிலும் தூய்மையற்ற நீர் தேங்கி அதில் நடந்து, ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் மூலமாக நோய்த் தொற்றுகள் ஏற்பட்டால் அடுத்த நாள் இந்த கூலி வேலை செய்பவனால் வேலைக்குச் செல்ல முடியாது. அவனது குடும்பமும் பொருளாதாரத்தில் அல்லாடும்.
 
எனவே அரசு மக்கள் பணியாளர்கள் மூலமாக இந்த மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்குமாறு திட்டங்கள் வகுக்க வேண்டும். மக்களின் சுகாதாரத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தி, வறட்சி காலத்தில் வாட்டும் நீர் பற்றாக்குறையைத் தீர்க்கவே மண்ணில் விழுகிற மழை நீரைப் பொன்னைப்போல் சேர்க்க வேண்டும். 
 
அரசாங்கம் மக்களின் நலத்தைப் பொருட்டு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு மக்களும் செவிசாய்த்து அரசுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
 
இனிமேலாவது இதற்கான நடவடிக்கைகளை அரசும், அரசு அதிகாரிகளும் முன்னெடுப்பார்களாக என காத்திருப்போம் என மக்கள் சமூக நலவிரும்பிகளும் எதிர்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கியார் புயல்: கரை திரும்பாத 120 தமிழக மீனவர்கள் - கலக்கத்தில் உறவினர்கள்