Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் 30 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Siva
திங்கள், 8 ஜனவரி 2024 (07:11 IST)
தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 30 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும் கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி,  கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்,  திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments