Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (07:30 IST)
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments