Publish Date: Sun, 09 Jan 2022 (08:59 IST)
Updated Date: Sun, 09 Jan 2022 (08:05 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஜனவரி 21ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு தொடங்க இருந்த நிலையில் அந்தத் தேர்வுகளை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது
இந்த தேர்வை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது