மதியம் 1 மணிக்குள் தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Mahendran
சனி, 31 மே 2025 (10:38 IST)
இன்று மதியம் ஒரு மணிக்குள், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரைக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கோடை காலம் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருவது என்பதை பார்த்து வருகிறோம்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அதன் தாக்கம் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், இன்று மதியம் ஒரு மணிக்குள், நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல், கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments