Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயில்கள்! – ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Advertiesment
Tamilnadu
, வியாழன், 17 மார்ச் 2022 (08:56 IST)
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பாசஞ்சர் ரயில் சேவைகளில் சிலவற்றை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பின்னர் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பாசஞ்சர் ரயில்களுக்கு முழு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மண்டல ரயில்வே நிர்வாகங்களின் வேண்டுகோளை ஏற்று அனைத்து மண்டலங்களிலும் குறிப்பிட்ட சில பாசஞ்சர் ரயில்களை மட்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த பட்டியலில் 111 ரயில்கள் இடம்பெற்றுள்ளன. மதுரை – செங்கோட்டை, நெல்லை – நாகர்கோவில் உள்ளிட்ட பாசஞ்சர் ரயில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரயில்சேவைகள் எப்போது முதல் தொடங்கப்படுகிறது என அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! – மூடப்படும் கேஸ் நிறுவனங்கள்!