Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி. பாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

Advertiesment
income tax raid
, வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (07:59 IST)
முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆண்டு திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தற்போது திடீரென முன்னாள் அதிமுக எம்எல்ஏ கேபிபி பாஸ்கர் வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை செய்து வருகின்றனர் 
 
நாமக்கல் மதுரை திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கேபிபி பாஸ்கருக்கு சொந்தமான இருபத்தி ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
முன்னாள் அதிமுக எம்எல்ஏ எம்பி பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக 315 சதவீதம் சொத்துகள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: பீகார் முதல்வர் கொண்டு வருகிறார்!