Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 28 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி - பின்னணி என்ன??

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (14:32 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் வெளியீட்டு விழாவில் பங்கேற்க பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி. 

 
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சென்னை புத்தகக் கண்காட்சி நேற்று தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், என்னை சந்திக்க வருபவர்கள் மட்டுமல்ல பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் செல்கிறபோது அங்கேயும் புத்தகங்கள் கொடுக்கும் பழக்கம் பரவிவருவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
 
இதுவரை எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1½ லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு நான் வழங்கியிருக்கிறேன். நான் எழுதியிருக்கக்கூடிய ‘‘உங்களில் ஒருவன்’’ என்ற நூலின் முதல்பாகத்தை இந்த மாதஇறுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன் என தெரிவித்தார். 
 
இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சுய சரிதை நூலான உங்களில் ஒருவன் வெளியீட்டு விழாவில் பங்கேற்க ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நந்நம்பாக்கம் வர்த்தக மையத்தில் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments