Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவிக்குப் பதில் எம்.பி. சீட் – திருநாவுக்கரசரை சமாதானப்படுத்திய ராகுல் !

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (10:53 IST)
தமிழகக் காங்கிரஸ் தலைவர் பதவிப் பறிகக்ப்பட்ட பின்பு காங்கிரஸ் தலைவர் ராகுலை டெல்லி சென்று சந்தித்துள்ளார் திருநாவுக்கரசர். அப்போது எம்.பி. தேர்தலில் சீட் கொடுப்பதாக ராகுல் காந்தி வாக்களித்துள்ளதாகத் தெரிகிறது.

திருநாவுக்கரசர் அதிமுக வில் மிக இளம் வயதிலேயே முக்கியப் புள்ளியாக செயல்பட்டவர். எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவின் அசுர வளர்ச்சிக்குப் பின் பணியாற்றியவர்களுள் அவரும் முக்கியமானவர். பின்னர் சிலக் காரணங்களால் அதிமுக வில் இருந்து விலகி பாஜக வில் இணைந்து பணியாற்றி வந்தார். அதன் பின்பு அங்கிருந்தும் விலகி கடந்த 2009 ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து பணியாற்றினார். அங்கு அவரது பணிகளைப் பார்த்து வியந்த காங்கிரஸ் தலைமை அவரைத் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக்கியது.

கடந்த இரண்டறை ஆண்டுகளாக தமிழகக் காங்கிரஸின் தலைவராகப் பணியாற்றி வந்த அவரை இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் பதவியில் இருந்து நீக்கியுள்ளது டெல்லி தலைமை. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் திருநாவுக்கரசர் மீது அதிருப்தியுற்று ராகுலிடம் அவரைப் பற்றியக் குறைகளை எடுத்துச் சென்றதுதான் எனக் கூறப்படுகிறது. திருநாவுக்கரசர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ராகுல் நீண்ட யோசனைக்குப் பிறகே இந்த கடினமான முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பதவி நீக்கத்திற்குப் பிறகு டெல்லி சென்று ராகுலை சந்தித்து இதுகுறித்து திருநாவுக்கரசர் பேசியிருக்கிறார். அப்போது திருநாவுக்கரசரை சமாதானப்படுத்திய ராகுல் கட்சிப் பணிகளை வழக்கம் போல செய்யுங்கள். உங்களுக்கு இந்த தேர்தலில் எம்.பி. சீட் உறுதியாகக் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் சமாதானமடைந்த திருநாவுக்கரசர் மகிழ்ச்சியாக தமிழகம் திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments