Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருநாவுக்கரசர் தலைமையிலான குழுவில் குஷ்பு! காங்கிரஸ் அதிரடி

திருநாவுக்கரசர் தலைமையிலான குழுவில் குஷ்பு! காங்கிரஸ் அதிரடி
, புதன், 6 பிப்ரவரி 2019 (07:38 IST)
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை சமீபத்தில் இழந்த திருநாவுக்கரசரை சமாதானம் செய்யும் வகையில் அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க முடிவு செய்த காங்கிரஸ் மேலிடம் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்புக்கு குழுவின் உறுப்பினராக அவரை நியமித்தது.

இந்த குழுவின் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் அவரது தலைமையின் கீழ் திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தனுஷ்கோடி ஆதித்யன் உள்ளிட்ட 14 பேர்களும் நியமிக்கப்பட்டனர்.

webdunia
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரை குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவிற்கு திருநாவுக்கரசர் தலைமை வகிப்பார். அவரது  தலைமையில் 35பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் ஜே.எம்.ஹாரூன், குஷ்பு, விஜயதரணி, அப்ஸரா ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஜிசாட் 31: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!