Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்.. கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்..!

G. V. Prakash Kumar

Mahendran

, வியாழன், 20 ஜூன் 2024 (16:49 IST)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஆளும் கட்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் திரை உலகை பொருத்தவரை விஜய், சரத்குமார், பா.ரஞ்சித், தங்கர் பச்சான், விஷால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் கண்டனமும் இனிமேல் இது மாதிரி நடக்காத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து கூறிய போது இந்த சம்பவம் முழுக்க முழுக்க தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம் என்று தெரிவித்துள்ளார். குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த  பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவாரண நிதி வழங்கிய உதயநிதி.! கள்ளச்சாராய விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை..! அமைச்சர் எவ.வேலு...