Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் கேட்கும் தொகுதிகள்.. No சொன்ன ஸ்டாலின்!.. சிதம்பரம் வைத்த கோரிக்கை!...

Advertiesment
stalin rahul
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா?.. காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளை திமுக கொடுக்குமா? என்பதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.. ஏனெனில் திமுக தரப்பு 25 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் கொடுப்பதாக சொல்கிறது.. ஆனால் காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிகளையும் 2 ராஜ்ய சபா கேட்கிறது. ஆனால் அதிகபட்சம் 28 தொகுதிகளை கொடுக்க முடியும் அதற்கு மேல் கொடுக்க முடியாது என திமுக சொன்னதாக செய்திகள் வெளியானது. ஆனால், அது உண்மையா என்பது தெரியவில்லை.

இதுவரை தொகுதி பங்கீடு விவகாரத்தை ராகுல் காந்தி டீல் செய்துவந்த நிலையில் தற்போது சோனியா காந்தி உள்ளே வந்திருக்கிறார். அவரின் ஆலோசனைப்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தற்போது திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்..

அப்போது காங்கிரசுக்கு 36 சீட்டுகளை திமுக ஒதுக்க வேண்டும்.. அதற்கு கீழ் குறைக்க முடியாது என சிதம்பரத்திடம் ராகுல் சொன்னதாக சொல்லப்படுகிறது.. இதை சிதம்பரம் ஸ்டாலினிடம் சொன்னபோது அவர் அதை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து, நாம் கேட்ட்கும் தொகுதிகளை கொடுக்க திமுக தயாராக இல்லை எனவே நாம் தொகுதிகளை குறைக்க வேண்டும் என ராகுலிடம் சிதம்பரம் சொன்னதாக சொல்லப்படுகிறது. எனவே, இன்று மாலைக்குள் ஒரு சுமூக முடிவு எட்டப்படும் எனத்தெரிகிறது. அதேநேரம், காங்கிரஸ் இறங்கிவரவில்லையென்றால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் 5,55,000 பேரல்கள் உற்பத்தி செய்யும் ஆலையில் குண்டுபோட்ட ஈரான்.. அதிர்ச்சியான சாட்டிலைட் புகைப்படங்கள்..!