Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இறங்கி வந்த திமுக!.. காங்கிரஸுக்கு அதிக தொகுதி!.. கூட்டணி நீடிக்குமா?...

Advertiesment
stalin rahul
தமிழக அரசியலை பொறுத்தவரை திமுகவுடன் காங்கிரஸ் பல வருடங்களாகவே பயணித்து வருகிறது. ஆனால், கங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு திமுக அமைச்சர் பதவி கொடுத்தது இல்லை. எனவேதான், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கேட்கிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸின் இந்த கோரிக்கை திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. ஒருபக்கம், தவெகவுக்கு ஆதரவாக பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் கருத்து கூறியது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்ப்டுத்தியது. ஒருபக்கம், மாணிக்கம் தாகூர் எம்.பி. திமுகவுக்கு எதிராக பேசி வந்தார்.

அந்நிலையில்தான், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்க முடியாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவிட்டார். எனவே, குறைந்தபட்சம் எங்களுக்கு 40 தொகுதிகளையாவது கொடுக்கவேண்டும் என காங்கிரஸ் கேட்டது..  இது தொடர்பாக சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக திமுக சொன்னது.. ஆனால் காங்கிரஸ் 39 சட்டமன்ற தொகுதிகளையும், 2 ராஜ்ய சபா சீட்களையும் கேட்டதாக தெரிகிறது..

எனவே இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.. ராஜ்யசபா தொகுதிகளுக்கான பதவி வருகிற 4ம் தேதியுடன் முடிவடைகிறது.. எனவே 5ம் தேதி திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.. எனவே நீங்கள் கூட்டணி தொடர்பாக உங்கள் முடிவு என்ன என்பதை 3ம் தேதிக்குள்  சொல்லிவிடுங்கள் என திமுக தரப்பில் காங்கிரஸுக்கு கெடுவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் சிதம்பரம் வீட்டில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில்தான், காங்கிரஸுகு 28 தொகுதிகளையும், ஒரு ராஜ்யசபா தொகுதிகளையும் கொடுக்க காங்கிரஸ் முன்வந்திருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெடு விதித்த ஸ்டாலின்!.. உடையும் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!.. தமிழக அரசியலில் பரபரப்பு...