Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை செய்தால் சுஜித் மீண்டும் உயிரோடு வருவான்: பிரபல நடிகர் அறிக்கை

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (12:00 IST)
மண்ணால் மூடப்பட்டு உயிரை விட்ட 2வயது சிறுவன் சுஜித், மீண்டும் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைக்கட்டதை எண்ணி நாடே கண்கலங்கி உள்ளது. மற்றவர்களுக்கு இது ஒருநாள் செய்தி. மறுநாள் அவரவர் பணியை பார்க்க சென்றுவிடுவோம். ஆனால் சுஜித்தின் பெற்றவர்களுக்கு இது காலம் முழுவதும் நினைத்து பார்க்கக்கூடிய ஒரு வலி. இந்த நிலையில் சுஜித்தின் பெற்றோர்கள் இந்த பெருந்துயரில் இருந்து மீண்டு வர நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு ஆலோசனையை தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
 
ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டுச் சென்று விட்டான் சுஜித். அவனை அரவணைக்கத் தவறிய காலமும் இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது.
 
இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்குச் சொல்ல விரும்புவது, சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். அதுபோல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிள்ளையை எடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப்பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
 
அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும், சுஜித்தின் ஆத்மா சாந்தியடையும், சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையைத் தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையைத் தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments