Publish Date: Mon, 24 Jan 2022 (10:42 IST)
Updated Date: Mon, 24 Jan 2022 (10:43 IST)
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 2021 - 22 ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் ஜனவரி 27ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் இந்த கலந்தாய்வு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இணைய வழியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு படிக்கும் மாணவர்கள் இன்று வெளியாகும் தரவரிசை பட்டியலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது
தரவரிசை பட்டியல் வெளியாகும் இணையதளங்கள் இதுதான்:
www.tnmedicalselection.net
www.tnhealth.tn.gov.in