யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் விஜய் எங்களை விமர்சனம் செய்கிறார்: ஆர்பி உதயகுமார்

Mahendran
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025 (11:03 IST)
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்,  யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் விஜய் எங்களை விமர்சனம் செய்கிறார் என அதிமுகவின் துணை எதிர்க்கட்சி தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் நடந்த மாநாட்டில் விஜய் பேசியது குறித்து ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், "யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் அதிமுக குறித்து விஜய் விமர்சனம் செய்திருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டர்கள் அவரது விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
முதல் மாநாட்டில் தி.மு.க-வைப் 'பாயாசம்' என்றார், இந்த மாநாட்டில் 'பாய்சன்' என்றார். அடுத்த மாநாட்டில் 'அமுது' என்று பேசுவாரா? என்ன பேசுவார் என்பது அவருக்கே வெளிச்சம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால், ஒரு மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது என்று தெரிவித்தார்.
 
விஜய் மட்டும்தான் தமிழ்நாட்டை காக்கப் பிறந்த அவதார புருஷர் போல பேசினால், அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய்யின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர் தவிர்த்து தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத காரணத்தால்தான் விஜய் அண்ணா, எம்.ஜி.ஆர் குறித்து பேசுகிறார்" 
 
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் விஜய்யை விமர்சனம் செய்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும்.. விஜய் ஆவேசம்,..

SIR பணியை தடுக்கும் மாநிலங்களில் காவல்துறையின் பொறுப்பை நீதிமன்றமே எடுத்து கொள்ளும்: சுப்ரீம் கோர்ட்

சோழர் காலத்து கோவிலில் திருமணம் செய்ய தடை.. அதிக விவாகரத்து காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments