Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காலாண்டு விடுமுறை அக்.12 வரை நீட்டிப்பு! – குஷியான மாணவர்கள்!

காலாண்டு விடுமுறை அக்.12 வரை நீட்டிப்பு! – குஷியான மாணவர்கள்!
, செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:06 IST)
தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் மாணவர்களுக்கு அக்டோபர் 12 வரை விடுமுறை வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பிறகு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 1 முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி அக்டோபர் 10 முதல் 12வரை நடைபெற உள்ளதால் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 12ம் தேதி வரை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60: அமலுக்கு வந்த உத்தரவு!