தமிழக பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் தற்போது பள்ளி அளவில் தேர்வு நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் இந்த சமயத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சில நாட்கள் விடுமுறை அளிப்பது வழக்கம்.
ஆனால் இந்த முறை பள்ளிகளில் காலாண்டு தேர்வு நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. எனினும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க தேர்வு அவசியம் என்ற கோரிக்கைகளும் இந்து வந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாவட்ட வாரியாக தனித்தனியாக காலாண்டு தேர்வுகளை நடத்த தற்போது பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரித்தபோது லீக் ஆனதால் இந்த முறை பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.