Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்! – கோவை வந்த பஞ்சாப் விவசாயிகள்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:33 IST)
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக கூறியிருந்த பஞ்சாப் விவசாயிகள் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் ஐந்து மாநில தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாக பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் வந்த பஞ்சாப் விவசாயிகள் அங்கு தந்தை பெரியார் படிப்பகத்தில் உள்ள பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் அன்னைக்கே AI பற்றி எச்சரித்தேன்.. நீங்கதான் கண்டுக்கல! - ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன்!

நீ பாட்ஷான்னா நான் ஆண்டனி! எண்ணி 7 செகண்ட்ல தூக்கிடுவேன்! - சீனாவை சீண்டிய ட்ரம்ப்!

டிரம்ப் 50% வரி போட்டாலும் இந்த ஒரு பொருள் மட்டும் விலை ஏறாது.. எந்த பொருள் தெரியுமா?

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் OTP பெற தடையில்லை: வழக்கு தள்ளுபடி..!

கோவையில் பெட்டி பெட்டியாக பறிமுதல் செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்.. 2000 கிலோ என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments