Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சைக்காரர்களிடம் வசூல் செய்த கோவில் ஊழியர் – புதுக்கோட்டையில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (14:36 IST)
புதுக்கோட்டையில் கோவில் ஒன்றில் பிச்சை எடுக்க அனுமதி வழங்க பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் ஒருவர் பணம் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் பிரசித்தி பெற்ற சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை அமாவாசை அன்று பக்தர்கள் திரளாக வருவது வழக்கம். இந்நிலையில் அந்த கோவிலுக்கு பிச்சை எடுக்க வரும் பிச்சைக்காரர்களிடம் கோவில் ஊழியர் இந்திராணி என்பவர் பிச்சையெடுக்க தலா ரூ.2,000 பெற்றுள்ளார், அதேபோல தர்ப்பணம் கொடுக்கும் புரோகிதர்களிடமும் ரூ.1,600 பெற்றுள்ளார்.

இதுகுறித்து பிச்சைக்காரர்கள் அளித்த தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட அறநிலையத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் மட்டும் எழுதி வாங்கி கொண்டு விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

டிரம்ப் வரிவிதிப்பு மிரட்டலுக்கு பணியாத இந்தியா.. பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்..!

தமிழகத்தில் குறையும் குழந்தை பிறப்பு! சீனாவை போல மாறி வரும் தமிழகம்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

முஸ்லீம் தலைமை ஆசிரியராக இருப்பதா? குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments