திருப்பரங்குன்றம் விவகாரம்: அரசின் மேல்முறையீடு இரு நீதிபதிகள் அமர்வில் தள்ளுபடி

Siva
வியாழன், 4 டிசம்பர் 2025 (16:25 IST)
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிராக அரசின் மேல்முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
 
இந்த விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த இரு நீதிபதிகள் அமர்வு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பதாகவும் அமர்வு தெரிவித்தது.
 
முன்னதாக, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள், மனுதாரருக்கு ஆதரவாக சிஐஎஸ்எஃப் வீரர்களின் பாதுகாப்போடு சென்று மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். ஆனால், தமிழ்நாடு காவல்துறை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த மறுத்ததுடன், மதுரை மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஆசிட் வீச்சு வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிர்ச்சி..!

புதினை நாங்கள் சந்திக்க கூடாதா? திட்டமிட்டு தவிர்க்கிறார்கள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

சென்னையில் மீண்டும் திடீர் மழை: நம்பி துணிகளைக் காயவைக்காதீர்கள்..! தமிழ்நாடு வெதர்மேன்..!

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்": திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments