Publish Date: Sat, 31 Aug 2024 (09:59 IST)
Updated Date: Sat, 31 Aug 2024 (10:01 IST)
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவானவரின் கூட்டாளி கைது செய்யப்பட்டதாகவும், அவரை பெங்களூரில் போலீசார் சுற்றி வளைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தலைமறைவாக இருக்கும் புதூர் அப்புவின் கூட்டாளி மாட்டு ராஜா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பட்டினப்பாக்கத்தில் மாமூல் வசூல் செய்து மிரட்டியதாக வந்த புகாரில் தனிப்படை போலீசார் மாட்டு ராஜாவை கைது செய்தனர்
ஆம்ஸ்ட்ராங் கொலையில் வெடிகுண்டு சப்ளை செய்ததாக, புதூர் அப்புவை போலீசார் தேடி வரும் நிலையில் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரை விசாரணை செய்தால் திடுக்கிடும் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மாட்டு ராஜாவுக்கு தொடர்பு உள்ளதா எனவும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.