Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி காலமானார்: பொதுமக்கள் இரங்கல்..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (17:38 IST)
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி ரமாதேவி இன்று காலமானதை அடுத்து அவருக்கு பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல சமஸ்தானங்கள் இருந்தது என்பதும் அந்த சமஸ்தானங்களை இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் படேல் இணைத்தார் என்பதும் தெரிந்ததே. 
 
அந்த வகையில் புதுக்கோட்டை சமஸ்தானமும் இந்தியாவில் இணைந்தது என்பதும் இருப்பினும் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் புதுக்கோட்டை தொண்டைமான் மன்னரின் பரம்பரையைச் சேர்ந்த சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது மனைவியும், புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியுமான ரமாதேவி இன்று காலமானார். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக இவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments