சரியான நேரத்திற்கு அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்த ஆட்சியர்: அதிரடி நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (18:32 IST)
புதுச்சேரியில்  சரியான நேரத்தில் அலுவலகம் வராத ஊழியர்களுக்கு விடுப்பு அளித்து மாவட்ட ஆட்சியர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
புதுச்சேரியில் அரசு அலுவலங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல புகார்கள் எழுந்தன. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அதிரடியாக அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தார்
 
இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரி நகராட்சி அலுவலகத்திற்கு அவர் ஆய்வு செய்ய வந்தபோது 50 சதவீத ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து சரியான நேரத்திற்கு வராத 24 பேர்களுக்கு விடுப்பு அளித்து உத்தரவு பிறப்பித்தார். 
 
மேலும் இதே போல் தொடர்ந்து சரியான நேரத்திற்கு அலுவலர்கள் வரவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு இடம் மாற்றம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments