Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகா தீபத் திருவிழாவிற்கு யாருக்கும் அனுமதி இல்லை!

Advertiesment
மகா தீபத் திருவிழாவிற்கு யாருக்கும் அனுமதி இல்லை!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (14:05 IST)
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத் திருவிழாவிற்கு யாருக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருகின்ற 29 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் மகா தீபத் திருவிழாவில் கடந்த ஆண்டு 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 
 
ஆம், வரும் 29 ஆம் தேதி மகா தீபத்தன்று கிரிவலம் செல்லவும் பக்தர்கள் கோவிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடக்கும் 9 நாட்கள் ஒரு நாளுக்கு 5000 பக்தர்கள் என ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக - அதிமுக கூட்டணி போல அடிமையாக இல்லாமல்... மணமக்களுக்கு உதயநிதி சூப்பர் வாழ்த்து!