Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளிக்கு மறுநாளான 13ம் தேதி பொதுவிடுமுறை - அரசு அறிவிப்பு!

st  George port-tamilnadu
, திங்கள், 6 நவம்பர் 2023 (18:31 IST)
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதற்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கலாமா என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 13.11.2023 அன்று விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இவ்வாண்டு தீபாவளியை 12.11.2023 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும்மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள். ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 13.11.2023 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள். கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு. விடுமுறை அளிக்கவும். அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 18.11.2023 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், பெற்றோர், மாணவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா