Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா

Chandra priyanka
, திங்கள், 6 நவம்பர் 2023 (18:17 IST)
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்துக் கோரி  மனுதாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரியில்  முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திரா பிரியங்கா (33வயது).

இவர் அங்கு பிரபல அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.

எனவே, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில்,  புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சமீபத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் பதவி நீக்கத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்து கோரி காரைக்கால் குடும்ப நல நீதிமன்றத்தில் மதுதாக்கல் செய்துள்ளார்.

வழக்கறிஞர்கள் போராட்டம் காரணமாக தானே நேரடியாக நீதிபதி முன்பு ஆஜராகி மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சந்திர பிரியங்கா 6 மாதமாக தனது கனவரை பிரிந்து வாழும் நிலையில் இன்று விவகாரத்து கோரி மமனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே இரவில் 200 பேர் உயிரிழப்பு: சரமாரியாக தாக்கும் இஸ்ரேல் ராணுவம்..!