Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம்… உறுதி செய்த அறிவுரைக்கழகம்!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (18:43 IST)
யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு பப்ஜி மதன் விண்ணப்பித்திருந்த நிலையில் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பப்ஜி மதன் மீது போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர் மனைவி கிருத்திகா, பப்ஜி மதன் வீடுகள், கார்கள் போன்ற சொத்து வாங்கி குவிக்கவில்லை. மதனிடம் ஒரே ஒரு ஆடி கார் தான் இருந்தது, அது சொகுசு கார் இல்லை. எந்த முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் குண்டர் சட்டம் போடப்பட்டது குறித்து அறிவுரைக்கழகம் விசாரணை செய்து வந்த நிலையில் இப்போது அதை உறுதி செய்துள்ளதாம். அதனால் பப்ஜி மதனுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்