Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆபாச யூட்யூபர் மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! – முன்ஜாமீனும் தள்ளுபடி!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 6 ஜூலை 2021 (10:36 IST)
யூட்யூபில் ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்த பப்ஜி மதன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன் ஜாமீன் கேட்டு பப்ஜி மதன் விண்ணப்பித்திருந்த நிலையில் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பப்ஜி மதன் மீது போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரேசன் கடைகளில் காலாவதி பொருட்கள்; அலுவலரே பொறுப்பு! – கூட்டுறவு சங்கம் சுற்றறிக்கை!