12ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 1ஆ, தேதி தொடங்கிய நிலையில் நாளை முதல் 11 ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காக 3302 தேர்வு மையங்கள் தயாராக இருப்பதாக தேர்வு துறை தெரிவித்துள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 3,302 தேர்வு மையங்களில் 8.25 லட்சம் பேர் எழுதவுள்ளனர் என்றும், தனித்தேர்வர்கள் 5,000 பேர் சிறை கைதிகள் 187 பேர் என்பது குறிப்ப்பிடத்தக்கது.
பொதுத்தேர்வுக்கான பணியில் 46,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், 4,334 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வு துறை தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்சாதனங்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டும் பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.