இன்ஸ்டாகிராமில் குழு அமைத்து விபச்சாரம் செய்த புரோக்கர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த அரியாங்குப்பம் என்ற பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களை வரவழைத்து அவர்களது வீட்டிற்கே இளம் பெண்களை அனுப்பி வைத்து விபச்சாரம் செய்து வருவதாக போலீசார் ரகசிய தகவல்கள் கிடைத்தது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடர்பவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் அடிக்கடி மர்ம நபர்கள் வந்து செல்வதை கண்டுபிடித்த போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக சோதனை செய்தனர்.
அந்த வீட்டில் இருந்த ஏழு மாத கர்ப்பிணி உள்பட ஐந்து பேர் இன்ஸ்டாகிராம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை விரித்து விபச்சார தொழில் நடத்தி வந்தது உறுது செய்யப்பட்டது. இதனை அடுத்து புரோக்கர் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.