இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக சாலையில் குளித்த இளைஞருக்கு போலீசார் ரூபாய் 3500 அபராதம் விதித்த சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் லைக் பெறுவதற்காக பல காமெடியான விஷயங்களை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே குளித்தார்.
இதனை அடுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக அந்த இளைஞருக்கு ரூபாய் 3500 காவல் துறையினர் அபராதம் விதித்தனர். ஏற்கனவே அவர் இன்ஸ்டாகிராம் லைக்ஸ்களுக்காக நள்ளிரவில் கிணற்றில் குதிப்பது, சாலையில் படுத்து உறங்குவது, உப்பு கலந்த டீயை அருந்துவது போன்ற காமெடியான விஷயங்களை செய்து வீடியோவை பதிவு செய்து லைக் பெற்றுள்ளார்.
தற்போதும் அதேபோல நடு ரோட்டில் குளித்ததை அடுத்து அவருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.