Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரியர் மாணவர்களுக்கு பாஸ் மார்க் போடுவதில் சிக்கல்!!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:12 IST)
தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் இயங்காத நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது. ஆனால் மறுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடக்குமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. 
 
இந்நிலையில் மறுதேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதாவது இறுதி ஆண்டு பாடங்களின் மறுதேர்வை தவிர மற்ற செமஸ்டர் பாடங்களில் மறுதேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக உத்தரவிட்டார். 
 
ஆனால், தற்போது அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதாவது பல மாணவர்கள் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற  எக்ஸ்டர்னல் மற்றும் இண்டர்னல் மதிப்பெண்கள் தேர்ச்சி வழங்கக்கூடிய அளவில் இல்லாததால் அரியர் மாணவர்களுக்கான தேர்ச்சி வழங்குவது எவ்வாறு என கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவு எங்கே? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

ரூ.103 டெலிவரி கட்டணம் சேர்த்த ஸ்விக்கி: பெரும் தொகையை அபராதம் விதித்த நீதிமன்றம்

அமெரிக்க தேர்தல் நடைபெறும் நாளில் ஏவுகணை சோதனை.. வடகொரியாவின் சேட்டை..!

வக்பு வாரியம் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி.. திருப்பதி அறங்காவலர் பேச்சால் பரபரப்பு..!

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments