Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது: சென்னை வானிலை ஆய்வு மையம்

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:22 IST)
தனியார் வானிலை ஆர்வலர்கள் புகழுக்காக வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது என்றும் அறிவியல் பூர்வமாக மட்டுமே வானிலை கணிப்புகளை வெளியிட வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மழை வெயில் குறித்த வானிலை அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிட்டு வரும் நிலையில் புயல் சூறாவளி கனமழை நேரங்களில் தனியார் வானிலை ஆர்வலர்களும் தங்களது சமூக வலைதளத்தில் வானிலை ஆய்வு மையத்திற்கு இணையாக கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்
 
தனியார் வானிலை ஆர்வலர்களின் கணிப்புகள் பொதுமக்கள் மத்தியில் சில சமயம் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த நிலையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் புகழுக்காக தனியார் வானிலை ஆர்வலர்கள் காலநிலை பற்றிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

வானிலை கணிப்புகள் என்பது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் புகழுக்காக வானிலை ஆர்வலர்கள் பேசுவதை மக்கள் பொருட்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் ஜனவரி 30, 31 ஆகிய இரண்டு நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வட தமிழகத்தின் சில பகுதிகளிலும் லேசான மழையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையை பொருத்தவரை இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை இருக்காது என்றும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் மட்டும் நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments