Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்!

தனியார் கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்!

J.Durai

மதுரை , வெள்ளி, 21 ஜூன் 2024 (14:26 IST)
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஊதிய உயர்வு கோரி அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5, 3, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணி மேம்பாடு அடிப்படையில் பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.
 
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்த பணி மேம்பாட்டுக்கான அரசானை எண் : 5 வெளியிடபட்டிருந்தும், அதற்கான பணப்பலன்களை வழங்
கவில்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ள சூழலில், முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம்
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பசும்பொன் முத்து
ராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள, பி.கே.மூக்கையாத்தேவர் நினைவிடத்தில், மூட்டா சங்க செயலாளர் சிவசங்கரி தலைமையிலான பேராசிரியர்களும், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி வளாகத்தில் மூட்டா சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையிலான பேராசிரியர்களும், கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம்,தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்றவர் தப்பியோட்டம்.. மருத்துவர்கள் அதிர்ச்சி..!