100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தகவல். 
	
 
									
										
								
																	
	
	 
	தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது தளர்வுகள் வழங்கப்பட்டு பேருந்து தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. 
	 
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	
	பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
	 
 
									
										
			        							
								
																	
	ஆனால், 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.