Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஸ்டாலின் ’வளர்ச்சி பிடிக்காமல் ’இப்படி ’செய்கிறார்கள் -ஆர்.எஸ் பாரதி

’ஸ்டாலின் ’வளர்ச்சி பிடிக்காமல் ’இப்படி ’செய்கிறார்கள் -ஆர்.எஸ் பாரதி
, செவ்வாய், 19 நவம்பர் 2019 (17:05 IST)
அவ்வளவு எளிதில் திமுக தலைவர் ஸ்டாலின், எந்தப் படத்துக்கு, விமரசனம் தர மாட்டார். ஆனால் , அசுரன் படம் வெளிவந்த பின்பு ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,சுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்திருந்தார்.
அதன்பிறகுதான், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில்,அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என தெரிவித்தார்.
 
அதன்பின்னர், அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாமக உள்ளிட்ட அத்துணை கட்சிகளும், முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என விமர்சித்தனர்.
 
இந்நிலையில் இன்று,முரசொலி நிலம் விவாரம்  தொடர்பாக , திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, இன்று, தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
முரசோலி நிலம் தொடர்பாக எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளது. எனவே முரசொலி நில விவகாரத்தில் பட்டியலினத்தவர் தலையிட உரிமை இல்லை.
 
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் என புகார் அளித்த சீனிவாசன் என்பவரிடம் அதுதொடர்பான ஆதாரங்கள் இல்லை. அதனால், இது தொடர்பாக ஆதாரங்களைச் சமர்பிக்க சீனிவாசம் ஆதாரம் கேட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வளர்ச்சி பிடிக்காமல் அவதூறு கூறுகிறார்கள் என  அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாப் சிங்கர்னா உங்க இஷ்டத்துக்கு போவீங்களா? – வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்