ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்த பிரிண்ட் மீடியாக்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல தொழில்கள் முடங்கப்பட்டுள்ளது உள்ளது என்பதும், கடைகள் மால்கள் திரையரங்குகளில் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
ஆனால் இந்த கொரொனாவில் இருந்து தப்பித்த ஒரே தொழில் மீடியா தான் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக ஆன்லைன் மீடியாக்கள் மற்றும் தொலைக்காட்சி மீடியாக்கள் வழக்கம் போல் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது என்பதும் தற்போது அதன் வருவாய் அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இரவு பகலாக கொரோனா குறித்த செய்திகளை ஆன்லைன் மீடியாக்கள் வெளியிட்டு வருகின்றன
இந்த நிலையில் மீடியா துறையிலும் பிரிண்ட் மீடியாக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரிண்ட் மீடியாக்கள் கிட்டத்தட்ட பிரிண்ட் செய்வதை நிறுத்தி விட்டதாகவும் பிரிண்ட் செய்து வரும் ஒருசில மீடியாக்களும் விற்பனை இல்லாமல் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது
நாடு முழுவதும் பிரின்ட் மீடியாக்கள் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக 15,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாகவும், இந்த மீடியாக்கள் மீண்டு வர அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் பிரிண்ட் மீடியாக்கள் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஊரடங்கு உத்தரவு, சமூக இடைவெளி ஆகியவை காரணமாக செய்தித்தாள்களை வாங்குவதற்கு ஆள் இல்லை என்றும் வீட்டில் செய்தித்தாளில் போடுபவர்கள் கூட வெளியே செல்ல பயந்து கொண்டு வேலைக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆன்லைன் மீடியாக்கள் அசுர பலம் பெற்றுள்ள இந்த நிலையில் பிரிண்ட் மீடியா அவற்றுக்கு தாக்கு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதன் பார்க்க வேண்டும்