சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பிக் போட்டியின் போஸ்டரில் தமிழக முதல்வரின் படம் மட்டுமே இருப்பதாகவும் பிரதமரின் படம் இல்லை என்றும் பாரதிய ஜனதாவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இது குறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
ரஷ்யாவில் இருந்து நேரடியாக செஸ் போட்டியை வழங்கும் உரிமையை தமிழக அரசு பெற்றது போலும் மத்திய அரசின் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் எந்தவித உதவியும் இல்லாமல் இந்த போட்டி நடைபெறுவது போல் ஒரு மாயையை திமுகவினர் செய்து வருவதாக பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்
அதனால்தான் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படத்தை போடாமல் இருப்பதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் விளம்பரத்தில் பிரதமரின் படம், பெயரை சேர்க்க கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையீட்டு மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன