இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைக்க தமிழகம் வரும் பிரதமர் மோடி விமானம் வழியாக ராமர் பாலத்தை கண்டு களித்தார்.
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலம் பழுதடைந்த நிலையில் தற்போது புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இன்று ராமநாவமியில் பிரதமர் மோடி பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார். இதற்காக இலங்கையில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தடைந்தார்.
விமானத்தில் வரும்போது ராமர் பாலத்தை கண்டதை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரதமர் மோடி “சிறிது நேரத்திற்கு முன்பு இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. மேலும், தெய்வீக தற்செயலாக, அயோத்தியில் சூரிய திலகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் அது நடந்தது. இருவரின் தரிசனத்தையும் பெற்ற பாக்கியம். பிரபு ஸ்ரீ ராமர் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி. அவரது ஆசீர்வாதம் எப்போதும் நம் மீது இருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.