புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் வரவிருக்கின்றதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதுடன், பிரதமர் மோடி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய உள்ளதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், மதியம் 3.30க்கு வழக்கம்போல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
நாளை ராமேஸ்வரம் வர இருக்கும் பிரதமர் மோடி, புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.