சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி ஆகிய இருவரும் சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து உரையாடினர்.அப்போது பிரதமர் மோடி தமிழகக் கலாச்சாரதை பிரதிபலிக்கும் வகையில் தமிழரின் பாரம்பரிய வேட்டி சட்டை மற்றும் தோளில் அங்கவஸ்திரம் அணிந்திருந்தார்.
இதைப் பார்த்த தமிழர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். அதிலும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டது, தமிழில் பேசியது எல்லாம் தமிழர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் , சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கவிஞர் வைரமுத்து, பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்தது குறித்து கூறியுள்ளதாவது :
பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்தது பார்க்க அழகாக இருந்தது. அவர் இதையே தொடரவேண்டும் என்பது எங்கள் விரும்பம். மேலும் மத்திய அரசு தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமெனவும் என தெரிவித்தார்.