Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா தடுப்பு குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு !

Advertiesment
கொரோனா தடுப்பு குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு !
, புதன், 18 மார்ச் 2020 (18:00 IST)
கொரோனா தடுப்பு குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில்,
 
நான் விரைவில் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறப்போகிறேன். அது சைனா வைரஸ் பற்றி, உணவு மற்றும் மருந்து ஆய்வு அமைப்பில் இருந்து வந்த தகவல் என குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், நான் சைனா வைரஸை மிக ஆபத்துடனே கருதுகிறேன். அதன் தொடக்க காலத்திலே அதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எல்லாரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். பொய்யான தகவல் என்னை வருத்தத்தை வரவழைக்கிறது என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் குணமான நபருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பா ?மீண்டும் மருத்துவமனையில் அனுமதி !