கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்ம விருது அளிக்கப்பட்ட நிலையில் அந்த விருதுடன் சென்னை பிரேமலதா விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதிக்கு பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குடியரசு தலைவரிடம் விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றுக் கொண்ட நிலையில் அந்த விருதை விஜயகாந்த்துக்கு சமர்ப்பிக்கும் விதமாக சென்னை வந்தவுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் சமாதி வரை பேரணி நடத்த திட்டமிட்டார் 
	 
	ஆனால் அனுமதி இன்றி பேரணி நடத்தக் கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர் .இரண்டு வாகனங்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என போலீசார் கூறியதால் தேமுதிக தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
	 
	 பத்ம விருதுடன் சென்னை திரும்பி இருக்கும் தன்னை போலீசார் இவ்வாறு தடுத்து நிறுத்தி இருக்க கூடாது என்று கூறிய பிரேமலதா நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு பிரேமலதா வாகனத்தை பின்தொடர்ந்து ஒரு சில வாகனங்களுக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.