Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமையில் பேசிய பிரேமலதா: செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (13:37 IST)
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா ஒருமையில் பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
 
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேசச் சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
 
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் இதுகுறித்தான செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, செய்தியாளர்களை ஒருமையில் பேசினார். நீ எந்த சேனல். நீ ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய் என்றெல்லாம் பேசினார். மீடியாக்கள் அவசரத்திற்கெல்லாம் கூட்டணி அறிவிப்பை அவசரம் அவசரமாக வெளியிடமுடியாது என கூறினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments