Publish Date: Fri, 08 Mar 2019 (13:28 IST)
Updated Date: Fri, 08 Mar 2019 (13:29 IST)
திமுக பொருளாளர் துரைமுருகன் தூக்கத்தில் உளறியிருப்பார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். இதுகுறித்து துரைமுருகன் தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என கூறிவிட்டதாக சொன்னார்.
இதுகுறித்து விளக்கமளித்த தேமுதிக துணை செயளாளர் சுதீஷ், எங்களது கட்சி நிர்வாகிகள் துரைமுருகனிடம் சென்றது கூட்டணி குறித்து பேச அல்ல பர்ஸ்னல் விஷயமாக பேசச் சென்றனர் என்றும் துரைமுருகன் கூறுவது உண்மை இல்லை எனவும் கூறினார்.
தேமுதிக கூட்டணி குறித்து பேசியிருந்தாலும் கூட துரைமுருகன் இப்படி ஒப்பனாக பேசியது தேமுதிகவினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துரைமுருகன் உட்கார்ந்து கொண்டே தூங்குபவர் அதனால் தூக்கத்தில் எதாவது உளறியிருப்பார். அவர் அவருக்கு அரசியல் நாகரிகம் கிடையாது என கூறியுள்ளார்.